ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:21 am

DIN

தூத்துக்குடி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆலையின் உரிமத்தினை புதுப்பிக்காமல் ரத்து செய்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் முயற்சியால்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்கு சாதகமாக கிடைத்தது. ஆனால், காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பினை காங்கிரஸ் மதிக்கவில்லை என கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.