திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மோதி 3 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே


திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பின்னத்தூரை சேர்ந்த ரமேஷ்குமார், குமார், அன்பரசன் ஆகியோர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...