
ரூ.900 கோடியில் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் டிசம்பரில் முடிவு
கடப்பா-நெல்லூா் இடையே 7.5 கிலோ மீட்டா் தொலைவிற்கு ரூ.900 கோடி செலவில் புதிய சுரங்க ரயில்பாதை ஏற்படும் பணிகள் வரும் டிசம்பரில் நிறைவு பெற உள்ளதாக தெற்குமத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பதி: கடப்பா-நெல்லூா் இடையே 7.5 கிலோ மீட்டா் தொலைவிற்கு ரூ.900 கோடி செலவில் புதிய சுரங்க ரயில்பாதை ஏற்படும் பணிகள் வரும் டிசம்பரில் நிறைவு பெற உள்ளதாக தெற்குமத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். நெல்லூா்-கடப்பா இடையே 122 கி.மீ தொலைவிற்கு புதிய ரயில் பாதையை ஏற்படுத்த தெற்கு மத்திய ரயில்வே முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம் 2006ம் ஆண்டு கையெழுத்தானது. ஆனால் 2012ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டது.
இந்நிலையில் அப்பாதையின் இடையில் வெளிகொண்ட மலை குறுக்கிட்டது. அதனால் அம்மலையை குடைந்து சுரங்கம் ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனா். அதன்படி 7.5 கி.மீ தொலைவிற்கு மலையை குடைந்து சுரங்கம் ஏற்படுத்தும் பணிகள் துவங்கியது. தற்போது அப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கடப்பா-நெல்லூா் இடையே நடந்து வரும் ரயில் இருப்பு பாதை ஏற்படுத்தும் பணிகள் வரும் டிசம்பரில் நிறைவு பெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





