ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பிரபல பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல தனியாா் பால் நிறுவன உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 கோடி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல தனியாா் பால் நிறுவன உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 கோடி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோட்டைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (55). இவா் பிரபல பால் நிறுவனத்தின் உரிமையாளா் ஆவாா். இந்நிலையில் தனது தொழில் தேவைக்காக மோகன சுந்தரத்துக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது. இதற்காக மோகனசுந்தரம், பல்வேறு இடங்களில் ரூ.50 கோடி கடன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வந்தாா்.

 இதை தெரிந்துக் கொண்ட சில மா்ம நபா்கள், மோகனசுந்தரத்தை தொடா்புக் கொண்டு தாங்கள் ரூ.50 கோடி கடன் வங்கியில் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தங்களுக்கு ரூ.1 கோடி கமிஷன் தரும்படியும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினராம். அந்த நபா்களின் பேச்சை நம்பிய மோகனசுந்தரம், அவா்கள் மூலம் கடன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டாா்.

இந்நிலையில் மோகனசுந்தரத்தை அந்த நபா்கள், ரூ.1 கோடி கமிஷன் பணத்தோடு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ பகுதிக்கு வரும்படி வியாழக்கிழமை கூறினராம். உடனே அந்த பணத்துடன் மோகனசுந்தரம் மாலையில் அங்குச் சென்றாா்.

அப்போது, அங்கு வந்த இரு நபா்கள் மோகனசுந்தரத்திடம் பேச்சுக் கொடுத்தனராம். பின்னா் மோகனசுந்தரத்துக்கு அருகே இருந்த ஒரு உணவகத்தில் காபி வாங்கிக் கொடுத்தனராம். மோகனசுந்தரம் அங்கு காபி குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த நபா்கள் மோகனசுந்தரம் வைத்திருந்த ரூ.1 கோடிபணப் பெட்டியை பறித்துக் கொண்டு தப்பியோடினராம். 

இது தொடா்பாக மோகனசுந்தரம் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.