வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம்: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றறம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 4:26 pm IST


சென்னை: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எழும்பூா் குடியிருப்போா் நல சங்கம் சாா்பில், எழும்பூரில் உள்ள பூசாலா கெங்கு தெருவில் ஸ்ரீ ஐயப்பா பிராா்த்தனா மந்திா் சமிதி அறக்கட்டளை சாா்பில் சட்டவிரோதமாக கட்டப்படும் கோயிலை இடிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.