தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்படும். வருமான வரிப் படிவங்கள் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) குறித்த தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்தது.

60 வயதுக்குக் கீழே இருந்து ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ளோர், 2017-18-ஆம் நிதியாண்டில் 60 வயதைப் பூர்த்தி செய்து, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளோர், 2017-18-ஆம் நிதியாண்டில் 80 வயதைப் பூர்த்தி செய்து, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளோர் வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களில் (ஏப்ரல் 2018-ஜூலை 2018) 3 கோடியே 42 லட்சத்து 56 ஆயிரத்து 408 பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இதே காலகட்டத்தில் 24 லட்சத்து 68 ஆயிரத்து 662 பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலானோர் மின்னணு முறையில் ("இ ஃபைலிங்') வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.