பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப்படையினர் மீது மறைந்த இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாக எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அந்த முகாமினுள் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அந்தக் குடியிருப்பை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


