

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.
2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை "டிரான்பரன்சி இன்டர்நேஷனல்" வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளது. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 6 வது இடத்திலும், சுவீடன் 7 இடத்திலும், கனடா 8 வது இடத்திலும், லக்சம்பர்க் 9 வது இடத்திலும், நெதர்லாந்து 10 வது இடத்திலும், உள்ளன. மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 81 வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட இந்தியா ஓரிடம் பின்தங்கியுள்ளது.
இது குறித்து டிரான்பாரன்சி இன்டர்நேஷனல் கூறுகையில், ஆசிய பசிபிக் நாடுகளில் பத்திரிக்கைகள், சமூக அமைப்புக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள் அல்லது பாதுகாப்புத்துறையை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் கூட ஊழல் அதிகம் பரவ காரணமாக அமைகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.