திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 2:06 pm

DIN

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்க  முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் அறிவித்துள்ளார்.  

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. இன்று அறிவித்துள்ளது. 2 வார நோட்டீசுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்தப்படும் என்று தொ.மு.ச சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். 

பேச்சுவார்த்தைக்குபிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் பஸ் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.