ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வார காலம் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அரசு இன்று அறிவித்தது. அதேசமயம் ஐ.எஸ். உட்பட மற்ற பயங்கரவாத அமைப்பினருடனான போர் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 12 முதல் 19ம் தேதி வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என ஆப்கன் அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தியை அதிபர் அஷ்ரப் கானி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஜூன் 12ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தலிபான்கள் மீதான தாக்குதல்களை அனைத்து பாதுகாப்பு படைகளும் நிறுத்த வேண்டும். அதேசமயம் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவ அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தலாம் என அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அரசின் இந்த போர் நிறுத்தத்தை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனரா என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக தலிபான்களின் உயர்மட்ட தலைவர்கள் இடையே ஆலோசனை நடந்து வருவதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகித் செய்தி வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










