/

கோவா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக் மாரடைப்பால் மரணம்

கோவா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சாந்தாராம் நாயக் (72) மாரடைப்பால்

News image
Updated On :9 ஜூன் 2018, 6:10 am

    
பனாஜி:
கோவா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சாந்தாராம் நாயக் (72) மாரடைப்பால் இன்று காலை மருத்துவமனையில் காலமானார். 

ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும். கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் சாந்தாராம் நாயக். ராகுல் காந்தி அரசியலில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இவர் தனது மாநிலத் தலைவர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் மார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சாந்தாராம் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரடிமா கவுண்டிகோ தெரிவித்துள்ளார்.

சாந்தாராம் நாயக்குக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.