தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் எடியூரப்பா: அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

முன்னாள் முதல்வர் எடியூரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்
தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் எடியூரப்பா: அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

முன்னாள் முதல்வர் எடியூரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அமைச்சரவை விரிவாக்கம், துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக நீடித்து வந்த குழப்பம், ஆட்சி நிர்வாகத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மஜத-காங்கிரஸ் கூட்டணியை விரும்பாத மற்றும் அமைச்சரவையில் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்துள்ள சில காங்கிரஸ், மஜத இளம் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர ஆர்வமாக உள்ளனர். இவர்களை சேர்த்துக்கொண்டு கட்சியை வளர்ப்போம். சட்டப்பேரவையில் 104 இடங்களைக் கொண்ட பாஜக சீறி எழுந்தால் காங்கிரஸ்-மஜத கூட்டணி தூள்தூளாக நொறுங்கிவிடும் என்று எடியூரப்பா கூறியிருந்தார். 

எடியூரப்பாவின் கருத்துக்கு அமைச்சர் சிவக்குமார் இன்று விளக்களித்து பேசினார். அப்போது, மஜத-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு சிலர் அதிருப்தியில் இருப்பது உண்மைதான் என்றும், அந்த பிரச்னைகள் ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும் என தெரிவித்தார். 

அனைத்து உறுப்பினர்களுடனும் தான் தொடர்பில் இருப்பதாகவும், தவறாக எதுவும் நடந்துவிடாது என்றும்  நம்பிக்கை தெரிவித்தார் சிவக்குமார். 

மேலும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் பணியை நன்கு அறிந்திருக்கிறார்கள், எனவே, யாரும் தேவையில்லாமல் எதையாவது குற்றம் சொல்ல முடியாது. தேவையில்லாமல் எந்த உறுப்பினரின் பெயரை கெடுத்துவிடக் கூடாது, எங்களுக்கும் அரசியலில் நிறையத் தெரியும் என்றவர் பேச வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் எதையாவது பேசுவதை எடியூரப்பா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சிவகுமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com