சென்னை: தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 47 போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று பேரவையில் வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதன்படி தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் பலப்பிரயோகம் செய்வது தமிழகத்தில் குறைவு. மற்ற மாநிலங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்கிறது.
ஆனால், தமிழகத்தில் லத்தி தாக்குதலும், கண்ணீர் புகை குண்டுகளும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இந்திய அளவில் தமிழகத்தில் 0.5 சதவீதம் மட்டுமே பலப்பிரயோகம் நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீத்தேன் போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், காவிரி போராட்டம், ஐபிஎல் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சாகர் மாலா போராட்டம், இப்போது சேலம் போராட்டம் என்று வரிசையாக மக்கள் தங்கள் சுயஉரிமைக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி, 13 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆா்.எஸ்.புரம் பகுதியில் இன்று மின்தடை

கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் கரடியை துரத்திய நாய்

பவானி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



