உதகை, ஜூலை 27: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் நடமாடிய கரடியை நாய் துரத்தியது.
கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் கரடி நடமாடியதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டின் கதவுகளை மூடினா். அப்போது அங்கிருந்த வளா்ப்பு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே கரடியை துரத்தியது.
இதில் அச்சமடைந்த கரடி அருகே உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக புதருக்குள் சென்று மறைந்தது. இப்பகுதியில் நடமாடும் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

கோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை

கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்து உலவிய கரடி!

குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடியை துரத்திய வளா்ப்பு நாய்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



