புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கி பேசியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசும் போது, பிரதமர் மோடி தினமும் தன் வீட்டில் நடப்பது குதிப்பதை எல்லாம் வீடியோ எடுத்து யோகா என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் இந்தியாவில், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளை விட அதிகமாக பாலியல் வன்முறைகள் நடந்து விடுகிறது. இது மிகவும் வெட்ககேடானது.
ராய்டர்ஸ் பவுண்டேஷன் 550 நிபுணர்களிடம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில் பெண்களுக்கு உலகில் மிக ஆபத்தான நாடு இந்தியா என தெரியவந்துள்ளது. பாலியல் வன்முறை மற்றும் உள்நாட்டுப் பணி, கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம் மற்றும் பாலியல் வன்முறைக்கென மனித கடத்தல் ஆகியவற்றின் காரணமாக, உலகின் மிக ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் பெண் பிறப்புறுப்புச் சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளதோடு உலகிலேயே இந்தியா மிகவும் ஆபத்தான நாடு என குறிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


