

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 137.10 புள்ளிகள் குறைந்து 34,046.94 புள்ளிகளாக இருந்தன.
அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 34.50 புள்ளிகள் குறைந்து 10,458.35 புள்ளிகளாக இருந்தன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2017-18 மூன்றாவது காலாண்டில் 7.2% அதிகரித்துள்ளது-
இது ஐந்து காலாண்டுகளில் மிக வேகமாக உள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக தினத்தில் அமெரிக்க பங்குகளில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து ஆசிய பங்குகள் சரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.