
மும்பை: மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.) பகுதியில் உள்ள ரசயான தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.)அமைந்துள்ள தராப்பூர் பகுதியில் ரசயான தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அங்குள்ள ரசயான தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த தீயானது அருகிலுள்ள மற்ற நிறுவனங்களும் மலமலவென பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த திடீர் தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.