ஜிஎஸ்எல்வி- எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்- 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது இந்த ராக்கெட் மூலம் 4 டன் (4,000 கிலோ) எடை வரை உள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கி.மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கி.மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் பூமியை சுற்றிவரும். தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-6ஏ செயற்கைகோளானது, ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் நேற்று மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவியது.
இது தற்போதைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் சுமக்கக் கூடிய எடையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் கருதப்படுகிறது.
தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியத்துவம் அளித்தும் அதை மேம்படுத்தவும் பயன்படும் இந்த செயற்கைகோள் 10 ஆண்டுகள் விண்ணில் வலம் வரும் தன்மை கொண்டது. பருவநிலை மாற்றத்தை அறியும் வகையில் இந்த புதிய செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோளில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ஆண்டனா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
இது செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களின் முழு அளவை பெற்று தரும் வசதியை கொண்டுள்ளது. இந்த என்ஜினில் மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் திரவ நிலையில் இருக்கும். ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பாக 30 வினாடிகள் வரை இந்த எரிபொருள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


