கர்நாடகாவில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும்: எடியூரப்பா நம்பிக்கை 

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்
கர்நாடகாவில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும்: எடியூரப்பா நம்பிக்கை 

சிமோகா: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று சனிக்கிழமை (மே 12) காலை 7 தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

கர்நாடகத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில், ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் காலமானார். இதனால் அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அட்டைகள் ஒரு வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 5,06,90,538 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,56,75,579, பெண்கள் 2,50,09,904, மூன்றாம் பாலினத்தவர் 5,055 பேர் வாக்களிக்கின்றனர்.

70,04,700 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 58,302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். 

சிமோகா தொகுதியில் உள்ள ஷிகார்புரா வாக்குச்சாவடியில் பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா தனது வாக்கை பதிவை செய்தார். 

பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் சித்தராமையா அரசு மீது மக்கள் விரக்தியடைந்துவிட்டனர். இது ஒரு நல்ல நாள், மாநிலத்தில் நல்ல ஆட்சிக்கு நடைபெற கர்நாடதா மக்கள் எல்லோரும் வாக்குச் சாவடிக்கு வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட எடியூரப்பா. மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வரும் 17-ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்க உள்ள விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பேன் என்றார்.

இதனிடையே மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் தனது வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்தராமையா அரசாங்கத்தை அகற்றுவதற்கு மக்கள் விரும்புவதாகவும், சித்தராமையா அரசாங்கத்தை அகற்றுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வெளியே வந்து வாக்களிப்பார்கள் என்று கௌடா தெரிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா அரசாங்கத்தை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்து வருகிறது. 

பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 12,001 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com