
சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப் போன்று தகவல்களை பகிரும் அமைப்புகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதில் தங்களது சமீபத்திய புகைப்படங்களை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பின் துணை நிறுவனர்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் பதவி விலகினர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஸ்டாகிராம் துணைத் தலைவராக இருந்து வரும் ஆடம் முஸ்சேரி, நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்கிறார் என தெரிவித்துள்ளது.
ஒரு டிசைனராக தனது பணியை தொடங்கிய முஸ்சேரி கடந்த 2008-ஆம் ஆண்டு முகநூல் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்து கொண்டார்.
ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுவார் என்றும் புதிய நிர்வாக குழுவை நியமிப்பார் என்று தெரிவித்துள்ளதுடன், அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, முன்னேற்றம் அடையும் என சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.