திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆய்வு செய்யாததே மதகுகள் உடைய காரணம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முக்கொம்பு கதவணைகள் ஆய்வு செய்யாததே மதகுகள் உடைய காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 4:40 am


முக்கொம்பு கதவணைகள் ஆய்வு செய்யாததே மதகுகள் உடைய காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ள்ளப்பெருக்கு காலங்களில் மேலணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொள்ளிடம் அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. இவற்றில் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்கும் பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணியில் இரவு, பகலாக 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை திருச்சி முக்கொம்பு மேலணைப் பகுதிக்குச் சென்று கொள்ளிடம் ஆற்றில் மதகுகள் உடைந்த பகுதியை ஆய்வு செய்த ஸ்டாலின், சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால்தான் மதகுகள் உடைந்தன. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசின் அலட்சியத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

மதகுகள் சீரமைப்பு பணிகள் இதுவரை 40 சதவீதம் அளவிற்கே நிறைவடைந்து உள்ளன என கூறினார். 

மேலும், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் இன்னும் சென்றடையவில்லை என குற்றஞ்சாட்டினார்.

பின்னர், தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் ஸ்டாலின், திருக்குவளையில் தனது தந்தை கருணாநிதி பிறந்த இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கும், தாத்தா, பாட்டி படங்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறார். 

ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி விமான நிலையம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைகள் பொருத்திய சாரட் வண்டி விமான நிலைய முக்கிய பிரமுகர் அறைக்கு வெளியே தயாராக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அவர் ஏறாமல் காரில் ஏறி நின்று தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தவாறே வந்த ஸ்டாலின், விமான நிலையத்துக்கு வெளியே ( திருச்சி- புதுக்கோட்டை சாலை) அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் நின்றவாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். அவர்கள் அளித்த சால்வை, நூல்களை அவர் பெற்றுக் கொண்டார். முன்னதாக மேடைக்கு அருகில்  தனக்கு மாலை அணிவித்த  யானைக்கு ஸ்டாலின் பழங்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.