சென்னை: மத்திய அரசு அமைத்துள்ள 15-வது நிதிக் குழு, தமிழகத்தில் புதன்கிழமை (செப் 5) முதல் பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், முதல்வா் பழனிசாமி, முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
15-வது நிதிக் குழுவை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரரி நந்த் கிஷோர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் முழு நேர உறுப்பினா்களாக தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றற சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு மாநில வாரியாக வேளாண்மை, வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை நிதிக் குழு ஆராய உள்ளது.
15-வது நிதிக் குழு வரும் 5-ஆம் தேதி முதல் தனது பயணத்தை தமிழகத்தில் தொடங்குகிறது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிதிக் குழு ஆலோசனை நடத்துகிறது. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் உள்ளிட்டவை குறித்து கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்கிறது.
இதைத் தொடார்ந்து, தலைமைச் செயலகத்தில் வரும் 6-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள், துறை முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நிதிக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்துக்கு நிதிக் குழு பரிந்துரைத்த அம்சங்கள், அதனால் கிடைத்த நிதி வகைகள், 15-வது நிதிக் குழுவில் வரைவு செய்யப்பட்ட அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அரசியல் கட்சிகள், அரசுத் தரப்புகளில் ஆலோசனைகளை முடித்த பிறகு, தென் மாவட்டங்களில் களப் பணிகளை நிதிக் குழு மேற்கொள்ள உள்ளது. ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள், மத்திய அரசின் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த ஆலோசனைகள், ஆய்வுகளின் அடிப்படையில் நிதிக் குழுவின் சார்பில் தமிழகத்துக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

