மதுரை: பிரபல திரையரங்கில் தீ விபத்து - ரசிகர்கள் ஓட்டம்
மதுரை மேலூரில் உள்ள பிரபல திரையங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அலறியடித்துக்கொண்டு


மதுரை: மதுரை மேலூரில் உள்ள பிரபல திரையங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
மதுரை மேலூரில் உள்ள பிரபல திரையரங்கமான கணேஷ் திரையரங்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கென்னடி கிளப் படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரையரங்கின் தரை தளத்தில் இருந்த மின் மோட்டார் அறையில் மின்கசிவால் திடீரென தீப்பற்றியது.
தீ மளமளவென திரையரங்கின் மற்ற பகுதிகளுக்கு பரவத்தொடங்கியதை அடுத்து திரையரங்கில் இருந்து ரசிகர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் தரை தளத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
திரையரங்கில் இருந்து ரசிகர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...