மக்களுக்கு இடையூறாக நடைபெறும் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஆளுநர் கோரிக்கை

குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் மக்களுக்கு இடையூறாக
மக்களுக்கு இடையூறாக நடைபெறும் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஆளுநர் கோரிக்கை


கொல்கத்தா: குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் போராட்டத்தை கைவிடுமாறு அம்மாநில ஆளுநர்  கேட்டுக்கொண்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜி தொடர் 3 நாட்களாக பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஜெதீப் தங்கர் வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சட்டம் 2019 குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என்று ஆராய முடிவு செய்துள்ளோம். அதேசமயம், அந்தச் சட்டத்தின் அமலாக்கத்துக்குத் தடை விதிக்கப் போவதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கும் மனுக்கள் மீது ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவும், அமைதி திரும்பவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தை கைவிட்டு இயல்நிலைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் போராட்டங்களினால் மக்களின் இயல்புவாழ்க்கையும்,  வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதை நினைவில்கொள்ள வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com