கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீரானது, தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் உபரிநீர் வரத்து கடந்து மூன்று நாள்களாக நொடிக்கு 8,500 கனஅடியாக இருந்து வந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 9,500 கன அடியாகவும், மாலை நிலவரப்படி சற்று நீர்வரத்து அதிகரித்து, நொடிக்கு 9,800 கன அடியாகவும் இருந்து வந்தது.