விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் 

News image
Updated On :22 செப்டம்பர் 2019, 5:20 pm

DIN


புது தில்லி: உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்  என்று மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

நிர்மலா சீதாராமன் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் பெரு நிறுவன வரி அதிகமாக இருந்ததே பிரச்னையாக இருந்தது. இப்போது, அந்த வரி குறைக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. உலகின் முதன்மையான அதி திறன் பேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஆலைகளைத் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகில் வேறு எந்த நாட்டிலும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வரி இல்லை. ஆனால், நாம்தான் இப்போது அளித்துள்ளோம். சீனாவுடன் ஒப்பிடும்போது குறைவான வரி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றில் இந்தியாவே சிறப்பாக உள்ளது. 

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாம், பெரு நிறுவன வரியைக் குறைத்துள்ளோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் முழுமையாக செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

14.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கும் வருவாய் உறுதித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துமாறு வேளாண் துறை அமைச்சகத்திடம் கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தனியார் நிறுவன உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச இருப்பதாக கூறினார் நிர்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.