தூத்துக்குடியில் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்ணின் கணவர் தற்கொலை
தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகேயுள்ள பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியர். இவரது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் திடீரென மாயமாகின.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை வின்சென்ட் மனைவி ஜான்சி மறைத்து வைத்து திருட்டு போனதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஜான்சியை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த வின்சென்ட் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...