அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.


புதுதில்லி: இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு விதித்த 21 நாள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
அந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா். தற்போதைய சூழலில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.
தற்போது அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று விவகாரம் தொடா்பாக இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கிறார். ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. ஊரடங்கை இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தலா ரூ 5000 அளிக்க வேண்டும். அப்படி அளித்தாலும் அரசுக்கு மொத்தச் செலவு ரூ 65,000 கோடிதான் செலவாகும். இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் என் பணிவான யோசனையை நம் முதல்வர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...