தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

சேலம் மாவட்டம்  தம்மம்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதி உயிருடன்  இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.
தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

 
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம்  தம்மம்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதி உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.    

தம்மம்பட்டி பனந்தோப்பு காட்டுக் கொட்டாய் பகுதியில் விவசாயத் தோட்டம் வைத்திருப்பவர் செல்வராஜ் (55). இவர் ஞாயிற்றுக்கிழமை  தனது தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு, மிரண்டு ஓடவே, அதன் பின், இவரும் ஓட, தவறி  80 அடி ஆழ விவசாயக் கிணற்றில் விழுந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி லட்சுமி (45), கணவரை காப்பாற்ற. கிணற்றில் இறங்க முயற்சிக்கும் போது அவரும், தவறி கிணற்றில் விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர், இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் அவர்கள் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் நல்ல முறையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com