/

மேகாலயாவில் கரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலி 

மேகாலயா மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அந்த மாநிலத்தின் முதல் பலியாகும்.

News image
Updated On :15 ஏப்ரல் 2020, 5:06 am

மேகாலயா மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அந்த மாநிலத்தின் முதல் பலியாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,815 -இல் இருந்து 11,439 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 353 -இல் இருந்து 377ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,190-இல் இருந்து 1,306 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 178 போ் பலியாகிவிட்டனா். 2,687 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 259 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில்,  மேகாலயா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து 69 வயதான மருத்துவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார். இதுவே அந்த மாநிலத்தின் முதல் பலியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.