ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளங்களில் முகநூலின் 5.7 பில்லியனை முதலீடு செய்து அவரை மீண்டும் ஆசியாவின் பணக்காரராக ஆக்கியுள்ளது.

News image
mukesh ambani
Updated On :23 ஏப்ரல் 2020, 10:55 am

DIN

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளங்களில் முகநூலின் 5.7 பில்லியனை முதலீடு செய்து அவரை மீண்டும் ஆசியாவின் பணக்காரராக ஆக்கியுள்ளது. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஜாக் மாவை விட 3 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதள நிறுவனமான முகநூல் (பேஸ்புக்) கடந்த 2014-ஆம் ஆண்டு முகநூலை கைப்பற்றிய பின்னர், தனது உலகளாவிய சந்தையை விரிவுப்படுத்த 5 புள்ளி 7 பில்லியனை முதலீடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இது 2014 முதல் சமூக ஊடக நிறுவனங்களின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். ஒரே குடையின் கீழ் டிஜிட்டல் செயலி மற்றும் வயர்லெஸ் சேவை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் வர்த்தக முடிந்தபின் தரவரிசை அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளரான அம்பானியின் செல்வம் செவ்வாயன்று ப்ளூம்பெர்க் தரவரிசையில் 14 பில்லியன் டாலர் குறைந்தது, இது ஆசியாவில் உள்ள எவருக்கும் டாலர் அடிப்படையில் மிகப்பெரிய சரிவு. ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் மா செவ்வாய்க்கிழமை வரை கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

இந்நிலையில், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை முகநூல் நிறுவனம் வாங்கியதை அடுத்து, புதன்கிழமை அமெரிக்க பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு, நேற்று புதன்கிழமை  ஒரே நாளில் 4 புள்ளி 7 பில்லியன் டாலர் உயர்ந்து, 49 புள்ளி 2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன்மூலம் சீனாவின் அலிபாபா குரூப் தலைவரான ஜாக் மாவை விட 3 புள்ளி 2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

செப்டம்பர் 2016 இல் தொடங்கப்பட்ட ஜியோ, மூன்று ஆண்டுகளில், சந்தாதாரர்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக மாறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.