நியூயார்க்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வல்லரசு நாடான அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் முதல்முறையாக செல்லப்பிராணியான பூனைகளுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அமெரிக்க மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கி கரோனா நோய்த்தொற்று இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தற்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளையும் விட்டுவைக்கவில்லை.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல்முறையாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் வளர்க்கப்படும் இரண்டு செல்லப் பிராணியான பூனைகளுக்கு நோய்த்தொற்று பாத்திப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதிலும், மருத்துவ பரிசோதனை செய்வதிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர் சுகாதாரத் துறையினர்.
பூனைகளுக்கு லேசான சுவாச பிரச்னைகள் மட்டுமே இருப்பதால் விரைவில் குணமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்த வீடுகளில் உள்ளவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பூனைகளும் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கின்றன.
பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் ஏழு புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, உலகெங்கிலும் சிறிய எண்ணிக்கையிலான அளவில் விலங்குகளுக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சில விலங்குகள் மக்களிடமிருந்து வைரஸைப் பெற்றிருக்கலாம் என்று கூறினாலும், விலங்குகள் அதை மனிதர்களுக்கு பரப்புவதற்கான அறிகுறியே இல்லை என தெரிவித்துள்ளனர்.
பூனைகளுக்கு, தங்கள் வீடுகளில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ளவர்களிடமிருந்து வைரஸ் பாதித்திருக்கலாம் என அமெரிக்க வேளாண் மற்றும் நோய் கட்டுப்பாடு, தடுப்பு கூட்டாட்சி மையங்கள் கூறுகின்றன. எனினும் செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு இந்த செய்தி மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் இதுவரை 2,58,689 பேர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், 15,302 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டடம் அருகே விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரம்

நீலகிரி கேரட் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குறுவள அளவில் கலைத் திருவிழா போட்டிகள்: ஆகஸ்ட் 19-இல் தொடக்கம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



