47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம்

துப்பாக்கி குண்டு வெடித்ததில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட

News image
இறந்த எல்லைபாதுகாப்புத்துறை ஹவில்தார் திருமமூர்த்தியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஆர்.காமராஜ்
Updated On :2 ஆகஸ்ட் 2020, 12:24 pm

DIN

நீடாமங்கலம்: துப்பாக்கி குண்டு வெடித்ததில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. திருமூர்த்தியின் உடலுக்கு அரசின் சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மகன் திருமூர்த்தி (47) இவருக்கு தமிழரசி(44) என்ற மனைவியும், அகல்யா(24 )என்ற மகனும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர். திருமூர்த்தி எல்லை பாதுகாப்பு படையில் 1990 இல் பணிக்கு சேர்ந்தார். எல்லை பாதுகாப்புப் படையின் 173 வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடந்த 26 ஆம் தேதி இரவு துப்பாக்கி குண்டு வெடித்ததில் திருமூர்த்தி பலத்த காயமடைந்து உத்தம்பூரில் உள்ள ரானுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி 31 ஆம் தேதி உயிரிழந்தார். 

புள்ளவராயன்குடிகாடு மயானத்தில் திருமூர்த்தியின் உடலுக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் மரியாதையில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.காமராஜ்,மாவட்ட ஆட்சியர் ஆனந்த்,மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை.

புள்ளவராயன்குடிகாடு மயானத்தில் திருமூர்த்தியின் உடலுக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் மரியாதையில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.காமராஜ்,மாவட்ட ஆட்சியர் ஆனந்த்,மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை.

திருமூர்த்தியின் உடல் தனி விமானம் மூலம் தில்லி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ரமேஷ்பஜன்தரி தலைமையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் எல்லைபாதுகாப்பு அலுவலக வாகனத்தில் திருமூர்த்தியின் சொந்த ஊரான நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு திருமூர்த்தியின் உடல் கொண்டுவரப்பட்டது. 

உடலைப் பார்த்து திருமூர்த்தியின் மனைவி தமிழரசி, மகள் அகல்யா, மகன் அகத்தியன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் திருமூர்த்திக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மன்னார்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத்தலைவர்கள் நீடாமங்கலம் வக்கீல் சோம.செந்தமிழ்ச்செல்வன்,மன்னார்குடி சேரன்குளம் மனோகரன் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரிதிநிதிகள்,அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள் பலரும் மலர்வளையம் வைத்தும் மலர் மாலைவைத்தும் மரியாதை செலுத்தினர். 

திருமூர்த்தியின் உடலை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுமந்து அலங்கரிக்கப்பட்ட எல்லைபாதுகாப்புத்துறை வாகனத்தில் வைத்தனர். வீட்டிலிருந்து மயானத்தை வாகனம் அடைந்ததும் அங்கு காவல்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் லூர்துவிஜய்பிரவீன் தலைமையில் போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கப்பட்டது. பின்னர் திருமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக திருமூர்த்தியின் இறுதிச்சடங்கிற்காக எள்லைபாதுகாப்புத்துறை சார்பில் 33 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகையை அவரது மனைவி தமிழரசியிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.