சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சட்டீஸ்கர்: ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

சட்டீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :3 ஆகஸ்ட் 2020, 7:55 am

PTI

சட்டீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பலோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர மீனா கூறியிருப்பது,

முதற்கட்ட விசாரணையின்படி, அர்ஜுண்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 முதல் 11 வயதுக்குள்பட்ட ஐந்து சிறுமிகளை தனது வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க அழைத்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக தனி அறைக்குள் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு குழந்தை சோர்வாக விளையாட முடியாமல் அமர்ந்திருப்பதை கண்ட தாயார் குழந்தையிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் மற்ற நான்கு சிறுமிகளிடமும் விசாரித்த போது அனைவரையும் பாலியல் கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெற்றோர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இவரை கைது செய்துள்ளோம். குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.