காஷ்மீர்: நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி
வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாண்டிபோராவில் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவர் மீட்கப்பட்டார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாண்டிபோராவில் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவர் மீட்கப்பட்டார்.
நோவ்போராவில் வசிக்கும் சமீன் ஷபீர் (வயது 15) மற்றும் பிர்தஸ் அஹ்மத் (16) என்ற இளைஞர்கள் பாண்டிபோராவின் குல்சூவில் உள்ள மதுமதி நல்லாவில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கினர்.
மூழ்வதைக் கண்ட உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் உடனடியாக மீட்பு பணியைத் தொடங்கினர். மேலும், இரு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் சிகிச்சைப் பலனின்றி சமீன் ஷபீர் உயிரிழந்தார்.
மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இளைஞர்கள் மதமதி நல்லாவில் குளித்ததால் தான் இந்த சம்பவம் நேர்ந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...