ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜய்யா கரோனாவால் பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, எளிமைக்கு பெயர் பெற்ற சுன்னம் ராஜய்யா (வயது 62) கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜய்யா கரோனாவால் பலி

Updated On :4 ஆகஸ்ட் 2020, 9:15 am

PTI

ஹைதராபாத், ஆகஸ்ட் 4: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, எளிமைக்கு பெயர் பெற்ற சுன்னம் ராஜய்யா (வயது 62) கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்ராச்சலம் தொகுதியில் மூன்று முறை (1999, 2004 மற்றும் 2014) சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

இவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜய்யாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.