தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் தொடர்ந்து விடிய விடிய பலத்த காற்று, மின்தடை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை முதல் விடிய விடிய பலத்த காற்று வீசிவருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்து வருகின்றன. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

News image

கொடைக்கானலில் பலத்த காற்று வீசி வருவதால் ஏரிச் சாலைப் பகுதியில் மரக் கிளைகளௌ விழுந்துள்ளது.

Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:54 am

கொடைக்கானல்:  கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை முதல் விடிய விடிய பலத்த காற்று வீசிவருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்து வருகின்றன. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஏரிச்சாலை,அப்சர்வேட்டரி,அடுக்கம்,பாலமலை,அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகளும்,மரங்களும் விழுந்துள்ளது.

தைக்கால்,பெரியகுளம் செல்லும் வனச் சாலைப் பகுதிகளில் அமைந்துள்ள மின் கம்பங்களில் சிறு,சிறு மரக் கிளைகள் விழுந்துள்ளதால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதுமே பலத்த காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை நிலவி வருவதால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது இதனால் பொது மக்கள் சிரமமடைந்துள்ளனர்.

எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை இருப்பதால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.