இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மகாராஷ்டிரம் : புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :8 ஆகஸ்ட் 2020, 7:45 am

ANI

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்திர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 187 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த  காவலர்களின் எண்ணிக்கை 10,614 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையின் மொத்த பலியின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

தர்போது தொற்றில் இருந்து குணமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 8,604 ஆக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் காவலர்களின் எண்ணிக்கை 1,896 ஆக உள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.