தமாமில் இருந்து 169 பயணிகள் மதுரை வருகை
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான தமாம் பகுதியிலிருந்து 169 பயணிகள் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை மதுரை வந்தனர்.


ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான தமாம் பகுதியிலிருந்து 169 பயணிகள் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை மதுரை வந்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு தமாமிலிருந்து 169 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் தமாம் பகுதியிலிருந்து திருச்சி ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் 169 பேர் புதன்கிழமை மதுரை வந்தனர்.
அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 86 பேர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர்களும் சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த 40 பேர்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...