அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63,489 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்தது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 5:21 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63,489 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும்  49,980 -ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 996 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 49,036-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளவில் மிகக் குறைந்த கரோனா பலி விகிதத்தில் இந்தியா உள்ளது, ஏனெனில் நாட்டில் இறப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் 23 நாள்களில் 50 ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், பிரேசிலில் 95 நாள்களிலும், மெக்சிகோவில் 141 நாள்களிலும் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் 156 நாள்கள் ஆகியுள்ளன.

பரிசோதனைகள் மற்றும் முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் உடனடியாக தனிமைப்படுத்தல் மற்றும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகள் போன்றவையே இந்தியாவில் இறப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 6,77,444 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,08,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,56,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 2,93,09,703 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 7,46,608 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 3 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிப்பு:  25,89,682
பலி:  49,980
குணமடைந்தோர்: 18,62,258
சிகிச்சை பெற்று வருவோா்: 6,77,444

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.