தென் கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா
தென் கொரியாவில் இன்று புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் அதிக பாதிப்பு இன்று பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென் கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா
தென் கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா
தென் கொரியாவில் இன்று புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் அதிக பாதிப்பு இன்று பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இன்று புதிதாக 297 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 16,058 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக உள்ளது.
மக்கள் அதிகளவில் வாழும் அடர்த்தியான சியோல் பெருநகரில் அதிக அளவிலான பாதிப்பு பதிவாகி வருவதால் சுகாதார பணியாளர்கள் கட்டுபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து 6வது நாளாக அந்நாட்டில் 100 க்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்கள், வழிபாட்டு தளங்கள் போன்றவை மூட அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், வழிபாஅட்டு தளங்கள் தங்கள் வழிபாடுகளை இணையத்தில் ஒளிபரப்பி கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...