/

பாகிஸ்தானில் பள்ளிகளை திறந்தால் இரண்டாம் அலை ஏற்படும் : மாகாண அமைச்சர் எச்சரிக்கை

பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளை திறந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அது கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு வழிவகுக்கும் என சிந்து மாகாண அமைச்சர் டாக்டர் அஸ்ரா எச்சரித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 10:53 am

DIN

பாகிஸ்தானில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளையும் முழுமையாக மீண்டும் திறந்து அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பினால் அது கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு வழிவகுக்கும் என சிந்து மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அஸ்ரா எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் முழுவதும் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகின்றது. மொத்த பாதிப்பான 2,90,444 பேரில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,116 ஆகவுள்ளது.  

இதனால் ஆகஸ்ட் முதல் பல தளர்வுகளை அறிவித்த பாகிஸ்தான் அரசு வருகின்ற செப்டம்பர் 15 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ஷப்காத் மஹ்மூத் அறிவித்தார்.

இதுகுறித்து சிந்து மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அஸ்ரா பெச்சுஹோ கூறுகையில், கரோனா தொற்று முழுவதுமாக சரியாகும் வரை ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறக்கும் முடிவு தவறானது. அந்த வகுப்பு குழந்தைகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமற்றது.

அவர்களை பள்ளிக்கு வர வைத்தால் கரோனாவின் இரண்டாம் அலையை சந்திக்க நேரிடும். மேலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வெளியிடும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.