தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மங்களூரு மாநகராட்சி ஆணையராக அஷ்கி ஸ்ரீதர் நியமனம்

மங்களூரு மாநகராட்சியின் புதிய ஆணையராக அஷ்கி ஸ்ரீதரை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

மங்களூரு மாநகராட்சி ஆணையராக அஷ்கி ஸ்ரீதர்

Updated On :25 ஆகஸ்ட் 2020, 10:12 am

மங்களூரு மாநகராட்சியின் புதிய ஆணையராக அஷ்கி ஸ்ரீதரை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 20 நாள்களுக்கு முன்பு, முன்னாள் ஆணையர் அஜித்குமார் ஹெக்டே இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆணையர் பதவி காலியாக இருந்தது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர், பிதர் பகுதியில் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர். 

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஸ்ரீதர். இதற்கு முன்பு மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.