ஹரியாணா வேளாண்துறை அமைச்சருக்கு கரோனா
ஹரியாணா மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலாலுக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால்

ஹரியாணா மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால்
ஹரியாணா மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலாலுக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜெய் பிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில்,
கடந்த மூன்று நாள்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னை சந்தித்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மேலும், முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கூறினார்.
முன்பே, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், சபைத் தலைவர் கியான் சந்த் குப்தா மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...