/

வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளத்தால் 16 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளத்தால் 16 பேர் பலி (கோப்புப்படம்)
Updated On :28 ஆகஸ்ட் 2020, 10:50 am

PTI

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளத்தால் கோஹிஸ்தான் மாவட்டத்தில் 8 பேரும், ஸ்வாட்டில் 6 பேரும், ஷாங்க்லா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், இந்தப் பகுதிகளில் 40 வீடுகள் சேதமடைந்துள்ளது. பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் பேரிடர் மீட்புப் படை இயக்குநர் ஜெனரல் பர்வேஸ் கான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் கான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.