/

உ.பி.யில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்து வைத்த 11 வெளிநாட்டினர் கைது

உத்தரபிரதேசத்தில் கரோனா கட்டுபாடுகளை மீறி விருந்து வைத்ததாக 4 பெண்கள் உள்பட 11 வெளிநாட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
உ.பி.யில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்து வைத்த 11 வெளிநாட்டினர் கைது
Updated On :30 ஆகஸ்ட் 2020, 2:47 pm

PTI

உத்தரபிரதேசத்தில் கரோனா கட்டுபாடுகளை மீறி விருந்து வைத்ததாக 4 பெண்கள் உள்பட 11 வெளிநாட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கரோனா தொற்றின் காரணமாக விருந்து போன்ற நிகழ்விற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் காவல் எல்லைக்குள்பட்ட ஒரு வீட்டில் விருந்து நடைபெற்றது.

இதையடுத்து அந்த வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 11 வெளிநாட்டினரைக் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டவர்களில்  3 பேர் நைஜீரியா, 4 பேர் கேமரூன் மற்றும் 4 பேர் உகாண்டா நாடுகளைச் சார்ந்தவர்கள் ஆவர்.

மேலும், அவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.