மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்கள் தடுத்து நிறுத்தம்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 10:00 am

ANI

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பியளிக்க சென்ற விளையாட்டு வீரர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் கர்தார் சிங் உள்பட 30க்கும் மேற்பட்டோர் தங்களின் விருதுகளை குடியரசுத் தலைவரிடம் திருப்பியளிக்க அவரது மாளிகை நோக்கி சென்றனர்.

இதையடுத்து, அவர்களை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து மல்யுத்த வீரர் கர்தார் சிங் கூறியதாவது,

பஞ்சாபிலிருந்து 30 விளையாட்டு வீரர்கள் மற்றும் வேறு மாநில வீரர்கள் சிலர் தங்களது விருதுகளை திருப்பியளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.