பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

கர்நாடகத்தில் நாளை(புதன்கிழமை) காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

News image
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
Updated On :9 டிசம்பர் 2020, 4:05 pm

ANI

கர்நாடகத்தில் நாளை(புதன்கிழமை) காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இன்று பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.  

அவைகூடியதும் இதற்கான மசோதாவினை கால்நடைத்துறை  அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்தார். இதையடுத்து காங்கிரஸ் பேரவைத் தலைவர் சித்தராமையா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள பேரவைத் தலைவர் குமாரசாமி ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து நின்று கூச்சலிட்டனர்.

பின் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நாளை கர்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பேரவைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.