ஹரியாணாவில் டிச.14-ம் தேதி பள்ளிகள் திறப்பு
ஹரியாணா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


ஹரியாணா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹரியாணா மாநில பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
ஹரியாணா மாநிலத்தில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணிநேரம் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 21ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் இதுவரை 2,48,079 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...