சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாளை(டிச.12) தில்லி - ஜெய்ப்பூர் சாலையில் மறியல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(சனிக்கிழமை) தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

News image
தில்லி எல்லையில் போராடும் விவசாயிகள்
Updated On :11 டிசம்பர் 2020, 1:27 pm

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(சனிக்கிழமை) தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மத்திய அரசுடனான 5 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களில் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு அளித்த வரைவு முன்மொழிவையும் விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும், மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லி நோக்கி மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுத்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, தில்லி நகரை இணைக்கும் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. தில்லிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

போராட்டம் குறித்து பாரதீய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் எஸ்.ராஜேவால் பேசுகையில்,

டிசம்பர் 12 ஆம் தேதி, டெல்லி - ஜெய்ப்பூர் சாலையைத் தடுத்து மறியலில் ஈடுபடவுள்ளோம். மேலும், 14 ஆம் தேதி பாஜகவின் மாவட்ட அலுவலகங்கள், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் ரிலையன்ஸ் / அதானியின் சுங்கச் சாவடிகள் முன்பு போராட்டத்தை நடத்துவோம்.

போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் தற்போது ஈடுபடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.